இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 7:28PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் (UNSR) திருமதி ஹெபா ஹக்ராஸுடன், மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு டி.கே. அனில் குமார் புது தில்லியில் நவம்பர் 17, 2026 அன்று கலந்துரையாடினார். சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் ‘பிரஷாஸ்த் 2.0’ (PRASHAST 2.0) செயலி வாயிலாக 6 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதும் விவரிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆர்.கே. புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற திருமதி ஹெபா ஹக்ராஸ், சிறப்புத் தேவைகள் கொண்ட மாணவர்களுக்கான வசதிகளைப் பார்வையிட்டதுடன், பெற்றோர்களுடனும் கலந்துரையாடினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338112®=3&lang=1
***
SK/SE/RJ