சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 7:52PM by PIB Chennai
பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் (PMSSY) கீழ் செயல்படும் புதிய எய்ம்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, அவற்றின் செயல் இயக்குநர்களுடன் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா புது தில்லியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அனுமதிக்கப்பட்ட 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தற்போது செயல்படும் 18 நிறுவனங்களில் 14,860 படுக்கைகள் மற்றும் 404 அறுவை சிகிச்சை அரங்குகள் பயன்பாட்டில் உள்ளன. 2026-27 நிதியாண்டில் இதுவரை 97.41 லட்சம் புறநோயாளிகள் பதிவு, 4.91 லட்சம் உள்நோயாளிகள் அனுமதி, 3.18 லட்சம் அறுவை சிகிச்சைகள், 629 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 3,593 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு எய்ம்ஸ் நிறுவனமும் தமக்கெனச் சிறப்புத் துறைகளை அடையாளம் கண்டு செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்றும், பிராந்திய அளவில் உயர் சிகிச்சை வசதிகளை வலுப்படுத்த உள்ளூர் மருத்துவமனைகளுடன் பரிந்துரைத் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பான, மன அழுத்தமற்ற சூழலை உறுதி செய்யவும், காலிப் பணியிடங்களை நிரப்பிப் பொதுமக்கள் குறை தீர்ப்பை மேம்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338125®=3&lang=1
***
SK/SE/RJ