ஆயுஷ்
azadi ka amrit mahotsav

புர்கினா பாசோ அதிபரின் சிறப்பு ஆலோசகரும் அமைச்சருமான ரோஜர் பாரோ உடன் மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 7:02PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ், புர்கினா பாசோ நாட்டின் அமைச்சரும் அதிபரின் சிறப்பு ஆலோசகருமான திரு. ரோஜர் பாரோ தலைமையிலான உயர்மட்டக் குழுவினரைப் புதுடெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார். நவம்பர் 17 முதல் 25 வரை இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இக்குழுவினர் பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆயுஷ் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புர்கினா பாசோவின் பாரம்பரிய மருத்துவத் தாவரங்களைப் பாதுகாத்தல், மூலிகை மருந்துகளின் தர நிர்ணயம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியா ஆர்வமாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், இருநாட்டு சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

புர்கினா பாசோவில் யோகா மற்றும் ஆயுஷ் சார்ந்த நல்வாழ்வுத் திட்டங்களை ஊக்குவிக்கவும், ITEC மற்றும் ICCR உதவித்தொகைகள் மூலம் அந்நாட்டினருக்குத் தொடர் பயிற்சி அளிக்கவும் இந்தியா முழு ஆதரவு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338094&reg=3&lang=1  

***

SK/NB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338582) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese