வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 6:51PM by PIB Chennai
தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ‘பர்வத மந்தன் மாநாடு 2026’ இன்று நிறைவடைந்தது. 11 இமயமலை மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. தோகன் சாஹு தொடங்கி வைத்தார்.
மலைப் பிரதேச நகரங்களில் ஒருங்கிணைந்த நீர் மற்றும் சுகாதார மேலாண்மை, பேரிடர் மீள்தன்மை, சூழலியல் தாங்குதிறன் மதிப்பீடு மற்றும் நகராட்சி நிதி ஆதாரங்களை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் 10 புதிய ஆய்வு அறிக்கைகள், இணையவழிப் படிப்புகள் மற்றும் இமயமலை நகர்ப்புற உயிர்-நீர்ப்பிடிப்பு திட்டம் ஆகியவை தொடங்கப்பட்டன. மேலும், 'அர்பன் லேர்னத்தான் 2.0' கீழ் 18 புதுமையான நகர்ப்புறத் தீர்வுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338087®=48&lang=2
***
SK/NB/RJ