சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் 2026 அனுசரிப்பு: கூட்டு நடவடிக்கைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 6:42PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில், நவம்பர் 18 முதல் 24 வரை அனுசரிக்கப்படும் 'உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் 2026' புதுடெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. காணொலி வாயிலாக உரையாற்றிய மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, நுண்ணுயிர் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தினார்.

'ஒரே ஆரோக்கியம், ஒரே இலக்கு: நுண்ணுயிர் எதிர்ப்பை உடனடியாகக் கட்டுப்படுத்துவோம்' என்ற கருப்பொருளின் கீழ், மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் நலனை ஒருங்கிணைத்த செயல்பாடுகளும், தேசிய செயல் திட்டம் 2.0 நடைமுறைப்படுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்வதைத் தவிர்த்தல், ஆன்டிபயாடிக் மருந்துகளின் கட்டுப்பாடற்ற விற்பனையைத் தடுத்தல் மற்றும் கால்நடை வளர்ப்பில் பொறுப்பான மருந்துப் பயன்பாட்டை உறுதி செய்தல் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிடப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338081&reg=48&lang=2   

***

SK/NB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338563) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी