சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 5:16PM by PIB Chennai
அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவின்படி, உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் மதுபானங்கள், போதைப்பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 1985-86 முதல் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2018-ல் புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தேசிய போதைப்பழக்க மறுவாழ்வு சிகிச்சை மையம் நடத்திய ஆய்வின்படி, நாட்டில் 7 கோடிக்கும் அதிகமானோர் போதைப்பொருள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதும், இதில் சுமார் 1.2 கோடி குழந்தைகள், 58 லட்சம் பெண்கள் அடங்குவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இச்சவாலை எதிர்கொள்ள போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தேசிய செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போதைத்தடுப்புக் கல்வி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிதல், ஆலோசனை வழங்குதல், சிகிச்சை, மறுவாழ்வு அளித்தல் மூலம் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், போதைக்கு அடிமையானவர்கள் மீதான சமூகப் பாகுபாட்டைக் களைந்து அவர்களைச் சமூகத்துடன் மீண்டும் இணைப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன் மூலம் ஆரோக்கியமான, போதையில்லா சமூகத்தை உருவாக்க அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337970®=3&lang=1
***
SK/PD/RJ