புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 4:43PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், மேற்கு வங்க அரசு, ஐநா வளர்ச்சித் திட்டம் ஆகியவை இணைந்து ‘மாநில அளவிலான நீடித்த வளர்ச்சி இலக்குகள் கண்காணிப்பை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் ஒருநாள் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2026 நவம்பர் 18 அன்று நடத்தின. வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் வகையில் நடைபெற்ற இப்பயிலரங்கில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி, ஒடிசா, தாத்ரா & நாகர் ஹவேலி, டாமன் & டையூ ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 50 அதிகாரிகள் பங்கேற்றனர்.
2030-ம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு தேசிய இலக்குகளை உள்ளூர் முன்னுரிமைகளுக்கு ஏற்ப மாநில, மாவட்ட அளவில் செயல்படுத்துவது அவசியமாகும். இதுவரை 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்களது குறியீட்டு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், எஞ்சிய கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது, தரவுகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து இப்பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337944®=3&lang=1
****
SK/PD/RJ