இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 5:46PM by PIB Chennai
இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள 'பராக்' வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை மேம்படுத்துவதற்கும், அதன் செயல்பாட்டு ஆயுளை நிர்வகிப்பதற்கும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ₹1,976.40 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் புதுடெல்லியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், ஏவுகணை அமைப்பின் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவை முழுமையாக மேம்படுத்தப்படும். இது இந்தியக் கடற்படைக் கப்பல்களின் வான்வழித் தாக்குதல் தடுப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும்.
இத்தகவலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338016®=48&lang=2
****
SK/NB/RJ