நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ந்த இந்தியாவுக்கான வங்கி சேவை குறித்த உயர்மட்டக் குழு ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 4:41PM by PIB Chennai

இந்திய அரசால் அமைக்கப்பட்ட வளர்ந்த இந்தியாவுக்கான வங்கி சேவை உயர்மட்ட குழு, அதன் அதிகார வரம்பின் கீழ் ஆய்வு செய்யப்பட உள்ள அம்சங்கள் குறித்து முதல் இரண்டு அமர்வுகளில் ஆலோசனை நடத்தியது. வங்கி சேவையை மேம்படுத்த வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் மேம்பாடு, ஒழுங்குமுறை, தொழிற்சாலை அமைப்புகள், நிதி தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகள், பங்குதாரர்களின் பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்களை கண்டறிவது குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.

வங்கி சீர்திருத்தம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் வழங்க கோரி, பங்குதாரர்களுக்கு இக்குழு அழைப்பு விடுத்துள்ளது.  வளர்ந்த இந்தியாவுக்கான வங்கி சேவை தொடர்பான கருத்துக்களை கேட்டறிய பங்குதாரர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும் உயர்மட்ட குழு திட்டமிட்டுள்ளது. இந்த ஆலோசனைகள், இந்திய வங்கித்துறையை வலுப்படுத்தவும், போட்டித் தன்மையை உருவாக்கவும், மீள்திறன் கொண்டதாக மாறுவதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337941&reg=3&lang=1

***

SK/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338144) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Odia