விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபின் சம்ராலாவில் ‘விளைநிலங்களைக் காப்போம்’ நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 9:29PM by PIB Chennai

நாடு தழுவிய ‘விளைநிலங்களைக் காப்போம்’ (Khet Bachao Abhiyan) இயக்கத்தின் கீழ், பஞ்சாபின் சம்ராலா வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார். விவசாயிகளுக்கான திட்டங்கள் அலுவலக அறைகளில் உருவாக்கப்படாமல், நேரடியாக வயல்வெளிகளிலேயே விவசாயிகளின் தேவைக்கேற்ப வகுக்கப்படும் என்று அவர் கூறினார். பயிர்க்கழிவுகள் மண்ணுக்கு உணவாகும் எனத் தெரிவித்த அவர், பயிர்க்கழிவு மேலாண்மை இயந்திரங்கள் மலிவு விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூன்று பயிர் சாகுபடி முறை மூலம் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

யூரியா மற்றும் டிஏபி உரங்கள் கள்ளச்சந்தைக்குச் செல்வதைத் தடுக்க ‘விவசாயி அடையாள அட்டைகள்’ வழங்கப்படுவதாகவும், போலி பூச்சிக்கொல்லிகளைத் தடுக்கக் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பிற மாநிலங்களில் விற்பனை செய்வதற்கான முழுப் போக்குவரத்துச் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும், விலை வீழ்ச்சியின்போது ‘சந்தைத் தலையீட்டுத் திட்டத்தின்’ கீழ் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337667&reg=3&lang=1

***

SK/SE/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2337990) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , हिन्दी , English , Urdu , Assamese