பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் பழங்குடியினர் கௌரவ தினம் 2026 கோலாகலக் கொண்டாட்டம்: ₹3,000 கோடி மதிப்பிலான 246 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 8:22PM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளான நவம்பர் 15-ஆம் தேதி, நாடு முழுவதும் ‘பழங்குடியினர் கௌரவ தினம் 2026’ சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடைபெற்ற முதன்மை நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

பல்வேறு மாநிலங்களில் சுமார் ₹3,000 கோடி மதிப்பிலான 246 வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதில் 38 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் PM-JANMAN திட்டத்தின் கீழ் 100 பல்நோக்கு மையங்கள் அடங்கும்.

நவம்பர் 1 முதல் 15 வரை நடைபெற்ற 'ஜன்ஜாதிய கௌரவ் பக்வாடா' இருவார விழாவில், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

இத்தகவலை மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337639&reg=3&lang=1

***

SK/NB/PS

 


(வெளியீட்டு அடையாள எண்: 2337966) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati