இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 1:29PM by PIB Chennai
மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதலீட்டாளர் கல்வி, பாதுகாப்பு நிதி ஆணையம், இந்திய பங்குகள், பரிவர்த்தனை வாரியம், சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில், முதலீட்டாளர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. 2026 நவம்பர் 17-ம் தேதி அன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்த முகாமில் மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை இணை அமைச்சர் திரு ஹர்ஷ் மல்கோத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னணி தொழிற்நிறுவனங்கள், வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த முகாமில், 7 வருடங்களாக உரிமை கோரப்படாத ஈவுத்தொகை, பங்குகள் ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலீட்டாளர்களின் சுயவிவரங்கள், அவர்களுடைய வாரிசுதாரர்கள் குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள தொகைகள் உள்ளிட்டவைகள் குறித்தும் இம்முகாமில் பதிவு செய்யப்பட்டது. இடைத்தரகர்கள் இன்றி முதலீட்டாளர்களுக்கு நிலுவைத்தொகை கிடைக்கும் வகையில், இம்முகாமில் ஒற்றச்சாளர முறை பின்பற்றப்பட்டது.
இந்த முகாமில் உரையாற்றிய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை இணை அமைச்சர் திரு ஹர்ஷ் மல்கோத்ரா, தாங்கள் பணியாற்றிய, முதலீடு செய்த நிறுவனங்களில் இருந்து வர வேண்டிய தொகை கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். முதலீட்டாளர் பயன்பெறும் வகையில் அவர்களது குறைகளை களைய இதுபோன்ற முகாம்கள் அதிகளவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் 62,700 கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டதாகவும், அதில் 2,500 முதலீட்டாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யப்பட்டதாகவும் கூறினார். உரிமைகோரப்படாத ஈவுத்தொகை, முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய பங்குத்தொகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337817®=3&lang=1
***
SK/LN/PS