இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டுத் தொடர்களுக்கான நிலையான கட்டமைப்பை உருவாக்க 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 12:48PM by PIB Chennai

கேலோ இந்தியா கொள்கை, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நாட்டில் பரவலான, நிதி ரீதியாக விளையாட்டுத் தொடர்களுக்கான (லீக்) நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான விரிவான வரைவை உருவாக்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை, 14 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுகள், மகளிர் விளையாட்டுகள், இளைஞர் விளையாட்டுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, பொருத்தமான செயல்பாட்டு மாதிரிகளை இந்தக் குழு பரிந்துரைக்கும்.

மத்திய விளையாட்டுத் துறை இணைச் செயலாளர் திரு குணால் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் இந்தக் குழுவில், கேலோ இந்தியா திட்டத்தின் இணைச் செயலாளர், இந்திய ஒலிம்பிக் சங்கம், பிசிசிஐ, ஒளிபரப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். தனியார் முதலீடுகளை ஈர்த்தல், அரசின் விளையாட்டு உள்கட்டமைப்பு  வசதிகளை பயன்படுத்துவதில் சலுகை, பள்ளி, கல்லூரிகளை லீக் போட்டிகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவை குறித்து ஆராய்ந்து, 8 வாரங்களுக்குள் இந்தக் குழு தனது பரிந்துரைகளை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337786&reg=3&lang=1  

***

SK/PD/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2337870) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Gujarati