இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 7:17PM by PIB Chennai
இந்திய-இத்தாலி பொருளாதாரக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2026 நவம்பர் 17 முதல் 18 வரை இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், தொழில், தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், வணிகங்களுக்கு இடையிலான, புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு, சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சருமான திரு அந்தோனியோ தஜானியுடன் திரு பியூஷ் கோயல் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும், இந்திய-இத்தாலி பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 23-வது அமர்வின் இணைத் தலைவராக செயல்படுவார். இந்திய-இத்தாலி வர்த்தக, புத்தாக்க மன்றக் கூட்டத்திலும் அமைச்சர் பங்கேற்பார். இது தவிர, அவர் இத்தாலியின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திப்பதுடன், இந்திய வணிகக் குழுவினருடனும் கலந்துரையாடுவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337610®=3&lang=1
***
SK/BR/PS