திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தொழிற்கல்வி, பயிற்சி கவுன்சிலின் நிர்வாக உறுப்பினராக டாக்டர் ராஜேஷ் சர்மா இணைகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 6:55PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தொழிற்கல்வி, பயிற்சி கவுன்சிலின் நிர்வாக உறுப்பினராக டாக்டர் ராஜேஷ் சர்மா இணைந்துள்ளார்.

இந்திய தொலைத்தொடர்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான டாக்டர் சர்மா, தொலைத்தொடர்புத் துறை, வெளியுறவு அமைச்சகம், மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம், தொலைத்தொடர்பு பொறியியல் மையம் முதலியவற்றில் பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

தேசிய தொழிற்கல்வி, பயிற்சி கவுன்சிலில் சேர்வதற்கு முன், அவர் இந்திய தொலைத்தொடர்பு சிறப்பு மையங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337601®=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337678) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी