இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 3:26PM by PIB Chennai
2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 44.0% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 22.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, தற்போது 31.97 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 35.8% அதிகரித்து 18.17 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது. மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் ஸ்மார்ட்போன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், பிற மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 56.5% உயர்ந்து 13.79 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள், தகவல் தொடர்பு சாதனங்கள், நினைவகம் ஒருங்கிணைந்த சுற்றுகள், சேமிப்பக சாதனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் ஏற்றுமதி 2.10 பில்லியன் அமெரிக்க டாலராகவும், தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்றுமதி 1.45 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், மலேசியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்திருப்பது, இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதித் துறை விரிவடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337395®=3&lang=1
****
SK/PD/SH