மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம் வரை மகளிர் பிரதிநிதித்துவம் விரிவடைய வேண்டும்: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 3:32PM by PIB Chennai

பெங்களூருவில் இன்று (2026 நவம்பர் 17) நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிராந்திய மாநாட்டை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைத்தார். மாநாட்டில் உரையாற்றிய அவர், பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து ஜனநாயக அமைப்புகளிலும் மகளிரின் பிரதிநிதித்துவம் விரிவடைய வேண்டும் என வலியுறுத்தினார். 2023-ம் ஆண்டு இயற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்த அவர், கொள்கை உருவாக்கம் மற்றும் சட்டம் இயற்றுதலில் மகளிரின் பங்களிப்பு ஜனநாயகத்தை மேலும் பொறுப்புணர்வு மிக்கதாகவும், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விரைந்து செயல்படுவதாகவும் மாற்றும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ஜனநாயக அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் எனக் குறிப்பிட்ட மக்களவைத் தலைவர், பெண் பிரதிநிதிகளின் டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உரிய நிறுவனக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய காமன்வெல்த் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் இந்தியப் பிராந்தியத் தலைவர் டாக்டர் டக்குபதி புரந்தேஸ்வரி, 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா பயணிக்கும் வேளையில், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மகளிரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளைச் சேர்ந்த 135 மகளிர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் மாநாடு, நாளை (நவம்பர் 18) நிறைவடைகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337401&reg=3&lang=1    

***

PD/SE/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2337486) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada