இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 9:59PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘கூட்டுறவின் மூலம் செழிப்பு’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அமைப்பின் மண்டல அலுவலகத்திற்கு மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டுறவு சங்கங்களின் பதிவு, ஒழுங்குமுறை மற்றும் தணிக்கை நடைமுறைகளை ஆய்வு செய்த அமைச்சர், முறைகேடுகளைத் தடுக்கவும் உறுப்பினர்களின் நலனைப் பாதுகாக்கவும் கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் மொத்தம் 1,872 மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் 420 சங்கங்கள் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்ட பிறகு பதிவு செய்யப்பட்டவை. புனே மண்டல அலுவலகம் மட்டும் மகாராஷ்டிரா, குஜராத், கோவா உள்ளிட்ட மேற்கு மண்டலத்தின் 818 சங்கங்களை நிர்வகிக்கிறது.
சங்கங்களின் பதிவு, விதி திருத்தங்கள், வருடாந்திர கணக்குத் தாக்கல் ஆகியவை இணையவழியில் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், நிதி ஒழுங்குமுறையை மேம்படுத்த 'பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டுறவு சங்கங்கள் (தணிக்கையாளர் அறிக்கை) ஆணை, 2026' வெளியிடப்பட்டுள்ளது.
புனேவைத் தொடர்ந்து, தென் மண்டலத்திற்கான பிரத்யேக மண்டல அலுவலகத்தை சென்னையில் அமைக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டுறவு சங்கங்களின் ஒப்புதல் நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவை வலுப்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337223®=3&lang=1
***
PD/NB/GS