பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபிஜி பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டம் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 10:53AM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்புத் தலைமையக பயிற்சி நிறுவனம் ஃபிஜி பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்காக, வளர்ந்து வரும் தலைவர்களுக்கான பாதுகாப்பு ஆளுகை மற்றும் பொது நிர்வாகத்தில் முதலாவது உலகளாவிய தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

2026 நவம்பர் 16-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை சுவாவில் நடைபெற உள்ள 4 வார கால பயிற்சித் திட்டத்தின் முதல்கட்டத்தை ஃபிஜி பாதுகாப்புத் துறை, முன்னாள் படைவீரர்கள் நல அமைச்சர் திரு பியோ டிக்கோதுவாதுவா தொடங்கி வைத்தார். இந்தியாவின் இந்த முன்முயற்சியை பாராட்டிய அவர், ஃபிஜியில் நிறுவனத் திறனை வலுப்படுத்த இத்திட்டம் உதவும் என்று தெரிவித்தார்.

ஃபிஜிக்கான இந்தியத் துணைத்தூதர் திரு சுனித் மேத்தா, பாதுகாப்புத் தலைமையக பயிற்சி நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்டி, இத்திட்டம் இரு நாடுகளுக்கிடையே வளர்ந்துவரும் நட்புறவை பிரதிபலிப்பதாகக் கூறினார்.

இப்பயிற்சியின் இரண்டாவது கட்டம் புதுதில்லியில் 2027-ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337268&reg=3&lang=1
                                                                                       ***

PD/IR/LDN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2337319) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Assamese