இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 10:05AM by PIB Chennai
எகிப்து நாட்டில் 2026 நவம்பர் 15 முதல் 16-ம் தேதிவரை மேற்கொண்ட தமது அதிகாரப்பூர்வ பயணத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நிறைவு செய்தார். இது ஆப்பிரிக்க நாட்டிற்கு அவர் சென்ற முதலாவது இருதரப்பு பயணமாகும். இப்பயணத்தின்போது அமைச்சர் பல்வேறு உயர்நிலை இருதரப்பு கூட்டங்களில் கலந்துகொண்டார். இந்தியா, எகிப்து வர்த்தகக் குழுவின் 7-வது அமர்வுக்கு இணைந்து தலைமை தாங்கினார். அத்துடன் வணிகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்தியா, எகிப்து நாடுகளின் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
இந்தியாவும் - எகிப்தும் வரலாறு, நாகரீக ரீதியிலான, மக்களிடையேயான தொடர்புகளைக் கொண்ட நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளன. இந்த நட்புறவு தற்போது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு என்று பல்வேறு அம்சங்களைக் கொண்ட கூட்டாண்மையாக வளர்ச்சியடைந்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா – எகிப்து இடையேயான உறவுகள் புதிய உத்வேகத்தை அடைந்துள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசியல், பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதியாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337258®=3&lang=1
***
PD/IR/LDN/GS