இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 8:20PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், 14 வயது பழங்குடியினச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எழுந்த புகார் குறித்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர் பூஷண் பாரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, நவம்பர் 14, 2026 அன்று ராஞ்சி மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், ஆணையத்தின் பதிவாளர் டாக்டர் சுதா சௌத்ரி தலைமையிலான குழு, நாளை (நவம்பர் 17, 2026) ராஞ்சிக்குச் சென்று இந்தப் புகார் குறித்து நேரடியாக விசாரணை நடத்தவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337156®=3&lang=1
***
SK/PLM/GS