இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 7:59PM by PIB Chennai
பெலாரஸுடன் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவின் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலான சிஎஸ்ஐஆர், பெலாரஸ் தேசிய அறிவியல் அகாடமி ஆகிய அமைப்புகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, பெலாரஸ் தேசிய அறிவியல் அகாடமி துணைத் தலைவர் டாக்டர் ஏ.வி. ட்ருகானோவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஏற்கெனவே, 2023 மே 22 அன்று இரு அமைப்புகளும் அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக, 2024 அக்டோபரில் தொடங்கப்பட்ட முதல் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவை தற்போது இரண்டாம் ஆண்டு செயல்பாட்டில் உள்ளன.
புதிய ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்கள், விஞ்ஞானிகள் ஆகியோருக்கு இடையிலான ஒத்துழைப்பு வலுப்பெறும். அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றுக்கும் ஊக்கம் கிடைக்கும்.
இரு நாடுகளின் விஞ்ஞானிகள் புதிய ஆய்வுத் திட்டங்களைச் சமர்ப்பிக்கலாம். மேலும், கூட்டு ஆய்வகங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் அறிவியல் உறவுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337144®=3&lang=1
***
SK/PLM/GS