இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 5:22PM by PIB Chennai
புதுதில்லியில் 45வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இந்நிலையில், இங்கு அமைக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி, சுங்கத்துறை அரங்கை, மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரிய தலைவர் விவேக் சதுர்வேதி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அரங்கில் ஜிஎஸ்டி செயல்முறை சீர்திருத்தங்கள் குறித்த முன்னெடுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், ஜிஎஸ்டி மற்றும் அதன் சேவைகளை பொதுமக்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில், பிரத்யேக சேவை மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. சரக்கு, சேவை வரி குறித்த விவரங்கள், வருமான வரி அறிக்கை தாக்கல், சுங்க நடைமுறைகள், மின்னணு விலைப்பட்டியல், ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தகவல்கள் இந்த அரங்கில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, இக்கண்காட்சியில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337002®=3&lang=1
****
SK/LN/SH