பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா மாநிலம் குருகிராமில் முன்னாள் படை வீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 5:15PM by PIB Chennai

முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில், ஹரியானா மாநிலம், குருகிராமில், முன்னாள் படை வீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்  2026 நவம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் பயன்பெறும் வகையில் இந்த வேலைவாய்ப்பு  வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் முன்னணி தொழில்நிறுவனங்களில், பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், நிர்வாகம், தளவாடங்கள், சுகாதாரம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் பணிபுரிய முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தகுதி உள்ள முன்னாள் படை வீரர்கள் www.dgrindia.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணமின்றி பதிவு செய்துகொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாம் 2026 நவம்பர் 20-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336995®=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337208) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी