சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை சார்பில் சமூகநீதி திட்டங்கள் தொடர்பான மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 5:11PM by PIB Chennai

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை சார்பில் சமூகநீதி திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான மாநாடு 2026 நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். சமூகநீதி, அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களை மேம்படுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. துறைசார்ந்த திட்டங்களின் செயலாக்கம் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்,  திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக, 450 மாவட்டங்களில் இருந்து 13,500க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336992®=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337204) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati