மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

யுபிஎஸ்சி சார்பில் தேர்வு பாதுகாப்பு, தொழில்நுட்பம் குறித்த பயிலரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 5:09PM by PIB Chennai

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையங்களின் செயலாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் உள்ள மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். தேர்வுகளை பாதுகாப்பான முறையில் நடத்துவது, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது, பணியாளர் தேர்வு சீர்திருத்தம் உள்ளிட்டவைகள் குறித்து இந்த பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது. இதில் உரையாற்றிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் திரு அஜய் குமார், தேர்வு முறையில் சீர்திருத்தம், புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். தேர்வுகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336990®=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337198) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी