57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: யுனைஸ்கோ காந்தி பதக்கத்திற்குப் போட்டியிடும் 10 திரைப்படங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 5:52PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2337196Views: 6

கோவாவில் 2026 நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதில், மதிப்புமிக்க ஐசிஎஃபடி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்காக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. அமைதி, சகிப்புத்தன்மை, அன்பு, சமூக நீதி, கலாசார ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இத்திரைப்படங்கள் அமைந்துள்ளன. இந்த ஆண்டு இவ்விழாவின் கருப்பொருள் 'எல்லைகளைத் தாண்டிய கதைகள்' என்பதாகும்.

யுனெஸ்கோவின் ஆதரவின் கீழ், பாரிஸில் உள்ள சர்வதேச திரைப்பட, தொலைக்காட்சி, ஒலி-ஒளித் தொடர்புக்கான கவுன்சிலான ஐசிஎஃப்டி-யுடன் இணைந்து, 46-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் அகிம்சை, சகிப்புத்தன்மை, கலாசாரப் புரிதல், அமைதியான வாழ்வு ஆகிய கொள்கைகளை வெளிப்படுத்தும் திரைப்படங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

நான்கு பேர் கொண்ட சர்வதேச நடுவர் குழுவுக்கு அல்ஜீரியாவைச் சேர்ந்த பேராசிரியர் அகமது பெட்ஜாயி தலைமை வகிக்கிறார். அர்ஜென்டினா-பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா கிறிஸ்டினா இக்லேசியாஸ், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜஸ் டுபோன்ட், இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் கடாம் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்கள்.

இந்தியாவின் சார்பில் 'கபீர் சர் கா அக்ரி லெசன்', 'ஸ்க்ரோல்', 'சேவ் மிச்சார்' ஆகிய மூன்று படங்கள் இதில் போட்டியிடுகின்றன.

மற்ற நாடுகளின் படங்களில் 'கால் மீ குயின்', 'மேரி மேடலின்', 'அவர் டைம் வில் கம்', 'ரஹ்மா', 'ஸ்ட்ராபெரீஸ்', 'தி ஃபார்ம்', 'வில் யூ ஸ்டில் பி மை ஃபிரண்ட்' ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கல்வி, குடும்ப உறவுகள், தொழிலாளர் உரிமைகள், குழந்தைகளின் நட்பு, சமூகப் பிரச்சினைகள், மனிதநேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத்திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை கருணை, பரஸ்பர மரியாதை, அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337049®=3&lang=1

(Release ID: 2337049)

****

SK/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2337196
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026