அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இத்தாலியில் உள்ள சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 5:03PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இத்தாலியின் ட்ரியஸ்தே நகரில் உள்ள சர்வதேச மரபணுப் பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தைப் பார்வையிட்டார். இம்மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் லாரன்ஸ் பேங்க்ஸ் அமைச்சரை வரவேற்றார். இப்பயணத்தின் போது, உயிரித் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பிரிவின் உயிரி மருந்து உற்பத்தி, பயிற்சி மையம், புதிய உயிரிப் பாதுகாப்பு நிலை-3 ஆய்வகம், செயல்பாட்டு செல் உயிரியல் ஆய்வகம் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், அங்குள்ள இந்திய ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வின் போது, உலகளாவிய உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி, புத்தாக்கம், அறிவியல் ஒத்துழைப்பில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்பை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்தியாவின் பயோஇ3 கொள்கைக்கு ஏற்ப உயிரி அடிப்படையிலான ரசாயனங்கள், பருவநிலை மாற்றத்தை தாங்கும் வேளாண் நடைமுறைகள், கார்பன் சேகரிப்பு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆகிய துறைகளில் இம்மையத்தின் இந்தியப் பிரிவு ஆற்றி வரும் பங்களிப்பு  காட்சிப்படுத்தப்பட்டது. 2023 முதல் 2026 வரை 22 நாடுகளைச் சேர்ந்த 67 ஆராய்ச்சியாளர்கள் இம்மையத்தின் புதுதில்லி பிரிவில் பயிற்சி பெற்றுள்ளனர். சுகாதாரம், வேளாண்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் இந்தியா-சர்வதேச மரபணுப் பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தின் கூட்டாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336987&reg=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337188) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu