நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 4:50PM by PIB Chennai
அம்மோனியம் நைட்ரேட், பென்டாஎரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட், பிக்ரிக் அமிலம் ஆகிய அபாயகரமான வெடிபொருட்களை இணையதளத்தில் விற்பனைக்குப் பட்டியலிட்டு விளம்பரப்படுத்தியதற்காக, எக்ஸ்போர்ட்டர்ஸ் இந்தியா தளத்தை இயக்கும் வெப்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடுகளைப் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் 2026 நவம்பர் 12 அன்று தள்ளுபடி செய்து, மத்திய ஆணையத்தின் அபராதம், வழிகாட்டுதல்களை உறுதி செய்துள்ளது.
விற்பனையாளர்களின் உரிம விவரங்களை வெளியிடாமலும், வாங்குபவர்களின் அடையாளம், உரிமத் தகுதியைச் சரிபார்க்காமலும் சாதாரணப் பொருட்களைப் போல இவற்றை விளம்பரப்படுத்தியது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ் தவறான விளம்பரம், நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும் என ஆணையம் கண்டறிந்துள்ளது. மேலும், அம்மோனியம் நைட்ரேட்டை தங்களது இணையதளத்தில் விளம்பரப்படுத்தியதற்காக டயல்4டிரேட், ஜஸ்ட் டயல் ஆகிய நிறுவனங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் வெடிபொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336972®=3&lang=1
****
SK/PD/SH