புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 அக்டோபர் மாதத்திற்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு: பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகரிப்பு; நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2026 அக்டோபர் மாதத்திற்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கடந்த ஆண்டை விட 0.3% புள்ளிகள் அதிகரித்து, 2026 அக்டோபரில் 55.7% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 58.4% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் முந்தைய ஆண்டை விட 0.8% புள்ளிகள் உயர்ந்து 35.0% ஆகப் பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்த தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 0.5% புள்ளிகள் அதிகரித்து 53.0% ஆகவும், பெண்களின் விகிதம் 33.3% ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டின் 5.2%-லிருந்து 4.9% ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.7% ஆகக் குறைந்துள்ளது. பெண்களின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5.0% ஆகவும், கிராமப்புறப் பெண்கள் வேலையின்மை விகிதம் 2026-ம் ஆண்டின் மிகக் குறைந்த அளவாக 3.8% ஆகவும் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் 3,70,475 பேரிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336905&reg=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337164) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada