மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல், புலனாய்வு குறித்த 3-வது தேசிய மாநாடு, நவம்பர் 16, 17-ல் புதுதில்லியில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 11:06AM by PIB Chennai

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம், “சைபர் பாதுகாப்பு மிகுந்த  இந்தியா: நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலிமைப்படுத்துதல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல், புலனாய்வு குறித்த 3-வது தேசிய மாநாட்டை 2026 நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில், புதுதில்லியில் நடத்துகிறது.

இந்த மாநாடு, இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல், செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்பு, அச்சுறுத்தல் நுண்ணறிவு, பிளாக்செயின், கிரிப்டோ, ட்ரோன், இணையம் சார்ந்த செயல்பாடுகள் தடயவியல், டிஜிட்டல் சான்றுகள், இணையச் சட்டம், கிளவுட் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336431&reg=3&lang=1  

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336881) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Marathi , Urdu , हिन्दी