இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 7:32AM by PIB Chennai
சாக்யமுனி புத்தரின் புனிதப் பொருட்கள் 2026 நவம்பர் 14 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய்-ஐ வந்தடைந்தன. கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தில் பௌத்த நம்பிக்கை, பாரம்பரியத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான கோல்டன் பகோடாவில், இந்தப் புனிதப் பொருட்கள் முறைப்படி வரவேற்கப்பட்டு, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அருணாச்சலப் பிரதேச ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் கைவல்ய திரிவிக்ரம் பர்னைக் (ஓய்வு), நம்சாய்-ல் உள்ள நாலுங் ஹெலிபேடில் புனித நினைவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார். அவருடன் துணை முதலமைச்சர் திரு சௌனா மெய்ன், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336418®=48&lang=2
***
SK/RB/RJ