கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவின் புனேவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், மத்திய அமைச்சர் அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 9:06PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில், 'தேசிய கனரக பொறியியல் கூட்டுறவு' (என்ஹெச்இசி) பன்மாநில கூட்டுறவு சங்கத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்கான 'பூமி பூஜை'யை 2026 நவம்பர் 15 அன்று மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மேற்கொள்வார். இந்நிகழ்ச்சியில், அவர் காணொலி வாயிலாக 'கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர்' அலுவலகத்தின் மேற்கு மண்டல அலுவலகத்தைத் திறந்து வைப்பதுடன், புனேயில் 'பாரத் டாக்ஸி' சேவைகளையும் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில், மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே, திருமதி சுனேத்ரா அஜித் பவார், மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர் திரு கிருஷ்ண பால் குர்ஜார், மத்திய கூட்டுறவு, சிவில் விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹோல் உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.

திரு அமித் ஷா தலைமையின் கீழ், கூட்டுறவு அமைச்சகம், கூட்டுறவு நிறுவனங்களை நிதி ரீதியாக வலுப்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் மேம்படுத்தவும், கூட்டுறவு சார்ந்த தொழில்முயற்சிகளை ஊக்குவிக்கவும், கூட்டுறவுத் துறையில் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புனேயில் நடைபெறும் இந்த நிகழ்வு, இத்தகைய முன்முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336332&reg=3&lang=1   

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336876) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati