இடுகை இடப்பட்ட நாள்:
14 NOV 2026 6:43PM by PIB Chennai
வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள், அசாம் ரைபிள்ஸின் 38-வது பட்டாலியன் வீரர்களுடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் மூலம், 2026 நவம்பர் 12 அன்று ஒரு டிப்பர் லாரியிலிருந்து 20 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.
உளவுத் தகவலின் அடிப்படையில், கச்சார் மாவட்டத்தில் உள்ள போர்கோலா அருகே, டிஆர்ஐ அதிகாரிகள் டிப்பர் லாரி ஒன்றை வழிமறித்துச் சோதனையிட்டனர். அப்போது, லாரியின் வலது பக்க உட்புற மேல் பகுதியில் பிரத்யேகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இடைவெளி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்த இடைவெளியைத் திறந்து பார்த்தபோது, மெத்தாம்பேட்டமைன் என்று சந்தேகிக்கப்படும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற மாத்திரைகள் அடங்கிய 32 பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மொத்தம் 20 கிலோ எடையுள்ள அந்த மாத்திரைகளும், லாரியும் போதை மருந்துகள், மனோவியல் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த லாரியில் இருந்த நபரும் கைது செய்யப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336270®=3&lang=1
***
AD/RB/RJ