இடுகை இடப்பட்ட நாள்:
14 NOV 2026 6:41PM by PIB Chennai
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஒடிசாவில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் உறுதியான வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார். பாலங்கிரில் நடைபெற்ற இத்திட்டத்தின் மாநில அளவிலான நிகழ்ச்சியில், முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி முன்னிலையில் அவர் இதனை அறிவித்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பாலங்கிரில் புதிய வேளாண்மைக் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
புதிதாக ஒரு முறையான கணக்கெடுப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இனி எந்தவொரு ஏழைக் குடும்பமும் பலவீனமான வீடுகளில் வசிக்க வேண்டிய சூழல் இருக்காது என்றும் திரு சவுகான் தெரிவித்தார். தகுதியுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் படிப்படியாக உறுதியான வீடுகள் வழங்கப்படும். மேலும், வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து மானியம் வழங்கும் என்றும் அவர் அறிவித்தார். இதன் மூலம், பயனாளிகள் தங்கள் மின் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைத்துக்கொள்ள முடியும், உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் ஈட்ட முடியும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336269®=3&lang=1
***
AD/RB/RJ