இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 10:28AM by PIB Chennai
ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத், நாளை (2026 நவம்பர் 16) முதல் நவம்பர் 19-ம் தேதி வரை செக் குடியரசுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பையும், ராணுவ உறவுகளையும் வலுப்படுத்துவதுடன், பாதுகாப்புத் தொழில்நுட்பம் சார்ந்த கூட்டுப் பணிகளுக்கான வாய்ப்புகளை ஆராய்வதும் இப்பயணத்தின் நோக்கமாகும்.
இப்பயணத்தின்போது, செக் குடியரசின் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிராக் நகரில் உள்ள ராணுவத் தலைமையகத்தில், துணைத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பெட்ர் செபெல்காவை ஜெனரல் தீரஜ் சேத் சந்திக்கிறார். அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார்.
ராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி, நவீனமயமாக்கல், வளர்ந்து வரும் பாதுகாப்புச் சவால்கள் ஆகியவை குறித்து அவர்களுடன் ஆலோசிக்கிறார். பிர்னோ நகரிலுள்ள பாதுகாப்புப் பல்கலைக்கழகம், நேட்டோவின் வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணுசக்தி பாதுகாப்பு மையம் ஆகியவற்றையும் அவர் பார்வையிடுகிறார்.
மேலும், பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336427®=3
****
TV/PLM/RJ