இடுகை இடப்பட்ட நாள்:
14 NOV 2026 1:52PM by PIB Chennai
தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தில்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நடவடிக்கைகள் இதில் ஆய்வு செய்யப்பட்டன. கடந்த ஓராண்டில் இதுதொடர்பாக 30-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கூட்டங்களை அமைச்சர் நடத்தியுள்ளார்.
குளிர்காலத்தில் மாசுபாடு அதிகரிப்பதால், திட்டமிடலுடன் நிறுத்திக்கொள்ளாமல், காலக்கெடுவுக்குள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை களத்தில் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். ஹரியானாவின் 7 நகரங்கள், உத்தரப் பிரதேசத்தின் 4 நகரங்கள், ராஜஸ்தானின் 4 நகரங்களுக்கு மூத்த அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, வாரந்தோறும் முன்னேற்ற அறிக்கை அளிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சரியாக செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
2028-க்குள் பழைய லாரிகள், பேருந்துகளுக்குப் பதிலாக பிஎஸ்-VI, சிஎன்ஜி, மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் பரிவர்த்தன் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட தூசு வெளியேற்ற அளவை மீறும் ஆலைகளுக்கு மின்சாரம் துண்டிப்பு, மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளுக்குத் தனித்திட்டங்கள் வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், போக்குவரத்துச் சங்கங்கள் ஆகியோரின் பங்களிப்புடன் விழிப்புணர்வுப் பிரசாரங்களையும் நடத்த வேண்டும் என அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336168®=3&lang=1
(Release ID: 2336168)
****
TV/PLM/SH