ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் ஆயுஷ் அமைச்சகம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டது

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 5:00PM by PIB Chennai

சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் ஆயுஷ் அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. 2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 27 வரையிலான காலகட்டத்தில் 309 பொதுமக்களின் குறைகளுக்கும், 50 பொதுமக்களின் குறை தொடர்பான மேல்முறையீடுகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இத்துறைசார் இயக்கத்தின் ஒரு பகுதியாக, பணியிடத் தூய்மையை மேம்படுத்துதல், ஆவணங்களைச் சிறந்த முறையில் நிர்வகித்தல், அலுவலக இடங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி 220 தூய்மைப் பணிகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில், 1,525 கோப்புகளை ஆய்வு செய்த அமைச்சகம், தேவையற்ற பழைய கோப்புகளை நீக்கியதன் மூலமும், பழைய பயன்பாடற்ற பொருட்கள், பழைய ஆவணங்களை அகற்றியதன் மூலமும் சுமார் 1,030 சதுர அடி அலுவலக இடத்தை காலிசெய்துள்ளது. மேலும், கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.1,89,298 வருவாய் ஈட்டியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328991&reg=3&lang=1 

***

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336188) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi