இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 7:05PM by PIB Chennai
ஸ்ருஷ்டி (யார்ட் 1283 ) என்ற அடுத்தத் தலைமுறை கடலோர ரோந்து கப்பல், கோவா கப்பல் கட்டும் தளத்தில் அக்டோபர் 27, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு நிதித்துறை செயலாளர் திரு விஸ்வஜித் சகாய் முன்னிலையில், திருமதி சந்தீபா சகாய் இந்தக் கப்பலை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வு இந்திய கடற்படையின் வளமான மரபுகளையும் மாண்புகளையும் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அடுத்தத் தலைமுறை கடலோர ரோந்து கப்பல்கள், கடல்சார் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல்சார் சொத்துகளின் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், கடல் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரோந்துக் கப்பல்களின் திறனை வலுப்படுத்தும். இக்கப்பல்களின் அறிமுகம், உள்நாட்டிலேயே கப்பல் கட்டும் முயற்சியில் இந்தியக் கடற்படை எட்டியுள்ள மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். மேலும் இது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய முன்முயற்சிகளுடன் இணக்கமானதாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2329197®=3&lang=1
***
TV/BR/SH