குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 8:32PM by PIB Chennai
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகமும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும், தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன்போது, தங்கள் அலுவலகங்கள், களப்பணி நிலையங்களில் தூய்மைப் பணிகள், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், ஆவண மேலாண்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டன.
இந்த முன்முயற்சி 142 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 1,500 சதுர அடி பரப்பளவு மீட்கப்பட்டதுடன், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்ட பயனற்ற பொருட்களையும், பழைய உபகரணங்களையும் அகற்றியதன் மூலம் ரூ. 2,47,156 வருவாய் ஈட்டப்பட்டது. அலுவலக வளாகங்களைக் கடந்து, பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருத்தல், சமூகப் பங்களிப்பை ஊக்குவித்தல், மின்னணுக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான புதுமையான அணுகுமுறைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336026®=3&lang=1
***
SK/BR/SH