பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின தேசிய இலக்கியத் திருவிழா நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 10:46AM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில், புதுதில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய பழங்குடியினர் இலக்கியத் திருவிழா நேற்று (2026 நவம்பர் 13) நிறைவடைந்தது. பழங்குடியின மக்களின் பாரம்பரியக் கதைகள், பாடல்கள், கவிதைகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன், அவற்றை நவீன இலக்கியத்துடன் இணைப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. பழங்குடியினர் பெருமை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இவ்விழா நடைபெற்றது.

நாடு முழுவதிலுமிருந்து பழங்குடியின எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், மொழியியல் அறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.

பழங்குடியின மக்களின் பாரம்பரியக் கதைகள், வீர காவியங்கள் குறித்து நடைபெற்ற அமர்வில், கோண்ட் ராமாயணம், பில் மகாபாரதம், மணிப்பூரின் வாரி லீபா கதை சொல்லும் மரபு, கம்பா-தோய்பி காவியம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இத்தகைய மரபுகளை ஒலி, ஒளிப் பதிவுகள் மூலம் ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

புதிய பழங்குடியின எழுத்தாளர்கள் தங்களின் சிறுகதைகள், கவிதைகளை வாசித்தனர். அவற்றில் பழங்குடியின மக்களின் வாழ்க்கை, பண்பாடு, அடையாளம், இன்றைய சமூகச் சவால்கள் இடம்பெற்றிருந்தன.

நிறைவு விழாவில் பேசிய பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ரஞ்சனா சோப்ரா, பழங்குடியின எழுத்தாளர்களுக்கு நிரந்தர வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் படைப்புகளைப் பதிப்பாளர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  பழங்குடியின மக்களின் இலக்கியப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அவர்களின் குரல்களை தேசிய அளவில் கொண்டு சேர்ப்பதே இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336125&reg=3&lang=1

(Release ID : 2336125)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336163) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali