வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இரண்டு நாள் பயணமாக நாளை எகிப்து செல்கிறார் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 10:54AM by PIB Chennai

மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் 2026 நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் எகிப்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றை அதிகரிப்பது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தியா – எகிப்து இடையிலான 7-வது கூட்டு வர்த்தகக் குழுக் கூட்டம் நாளை (2026 நவம்பர் 15) கெய்ரோவில் நடைபெறுகிறது. இதற்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலும், எகிப்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் திரு முகமது ஃபரீத் சாலேவும் கூட்டாகத் தலைமை வகிக்கின்றனர். அமைச்சர்கள் நிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சந்தை வாய்ப்புகள், வர்த்தகத் தடைகளை அகற்றுதல், வேளாண் பொருட்கள், மருந்துகள், ஜவுளி, ரசாயனப் பொருட்கள், உரங்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், சுங்க நடைமுறைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

இப்பயணத்தின்போது நடைபெறும் இந்தியா – எகிப்து வர்த்தக மன்றக் கூட்டம், தொழில் வர்த்தக மன்றக் கூட்டம், புத்தொழில் நிறுவனங்கள் கூட்டம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக வாய்ப்புகள், முதலீடுகள், கூட்டுத் தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சிகளில் இந்தியாவிலிருந்து 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், மூத்த தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். எகிப்தில் அந்நாட்டு அமைச்சர்களுடனும், ஆப்பிரிக்க ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடனும் திரு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துகிறார். எகிப்தின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்தி ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பியச் சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதும் இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336126&reg=3&lang=1

(Release ID: 2336126)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336157) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Kannada , Malayalam