சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 5:27PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பட்டியலின மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை (என்எஃப்எஸ்சி) திட்டத்தின் கீழ், 29 வயதான ஆராய்ச்சி மாணவி செல்வி அஞ்சலி குமாரி மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கத் துறையில் ஆராய்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
2022–2025-ம் ஆண்டு காலகட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் ரூ.11 லட்சம் நிதியுதவி, அவரது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பொருளாதாரத் தடைகளைக் கடக்க உதவியது. ஆராய்ச்சிப் படிப்பை நிறைவு செய்த அவர், தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலம் காங்ராவில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் (ஏபிஎம்சி) சந்தை மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிதியுதவி அவரது ஆராய்ச்சிக்கு உதவியது மட்டுமன்றி, அவரது குடும்பத்தின் சமூக-பொருளாதார நிலையையும் மேம்படுத்தியுள்ளன. மேலும், நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் பிற மாணவர்களும் உயர்கல்வி பயில அவர் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்.
இத்திட்டத்தின் மூலம் பட்டியலின மாணவர்களிடையே உயர்கல்வி மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, கல்விசார் சிறப்பு மற்றும் சமூக-பொருளாதார அதிகாரமளித்தலை வலுப்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335497®=3&lang=1&_gl=1
***
SK/SE/SH