புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 2:40PM by PIB Chennai
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் அறிவுசார் துறைகளின் பங்களிப்பை அளவிடுவதற்கான செயல்திட்ட அறிக்கையை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்திடம் அறிவுசார் அமைப்புகளுக்கான குழு சமர்ப்பித்துள்ளது. ரத்தன் பி. வாடல் தலைமையிலான இக்குழு தயாரித்துள்ள அறிக்கை பொதுமக்கள், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
அறிவுசார் பொருளாதாரத்தின் எட்டு முக்கியக் அம்சங்களையும், மனிதவளம், ஆராய்ச்சி, மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, தரவுத்தளங்கள், உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகள், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளின் பங்களிப்பைத் தனித்தனியாக அளவிடுவதையும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
இதற்காகப் பொதுவான அளவீட்டு முறையை உருவாக்கி, மத்திய, மாநில அரசுகள், துறைசார் அமைப்புகள், கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து செயல்படவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை https://www.mospi.gov.in/announcements என்ற இணைய தள இணைப்பில் உள்ளது.
இது தொடர்மாக பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் 2026 டிசம்பர் 12-க்குள் rau-2@mospi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335785®=3&lang=1
(Release ID : 2335785)
****
SK/PLM/SH