சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் இணையவழி வினாடி வினாவில் இதுவரை 28,876 பேர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 7:50PM by PIB Chennai

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் ‘போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள், வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இணையவழி வினாடி வினாப் போட்டி 2026 அக்டோபர் 26-ம் தேதி தொடங்கப்பட்டது.  இன்று வரை இதில் மொத்தம் 28,876 குடிமக்கள் பங்கேற்றுள்ளனர்.

போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் இளைஞர்களைத் தீவிரமாகப் பங்களிக்க ஊக்குவிப்பதும் இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

இந்த வினாடி-வினா போட்டி நவம்பர் 25 வரை நடைபெறுகிறது; இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள், https://mybharat.gov.in/quizzes/yuva/detail/Url9dlIwCinQVSf8lwPB9w/  என்ற இணைப்பை அணுகலாம். இந்தப் பிரச்சாரம், சுமார் 35.89 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளது. இதில் 14.36 கோடி இளைஞர்களும், 11.34 கோடி பெண்களும் அடங்குவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336005&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336054) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Urdu