இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 6:54PM by PIB Chennai
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, மலபார் 2026 கூட்டுக் கடற்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, நேற்று (2026 நவம்பர் 12) ஜப்பானின் யோகோசுகா கடற்படைத் தளத்திலிருந்து புறப்பட்டது.
இப்பயிற்சியில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றன. கடலில் நடைபெற்ற பயிற்சியில் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்த்துப் போரிடுதல், கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள், பீரங்கித் தாக்குதல், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெற்றன.
துறைமுகப் பயிற்சியில் கப்பல்களுக்கு இடையிலான குழுவினர் சந்திப்பு, விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தப் பயிற்சி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஆகியவற்றையும் இந்தியாவின் 'மஹாசாகர்' தொலைநோக்குப் பார்வையையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335989®=3&lang=1
(Release ID : 2335989)
****
SK/PLM/SH