இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 3:53PM by PIB Chennai
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 12-வது பதிப்பு கூட்டு ராணுவப் பயிற்சியான ‘மித்ரா சக்தி 2026’-ல் பங்கேற்பதற்காக, 170 வீரர்களைக் கொண்ட இந்திய பாதுகாப்புப் படைக் குழு இன்று இலங்கை புறப்பட்டது.
இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நவம்பர் 13 முதல் 26, 2026 வரை 14 நாட்கள் இப்பயிற்சி நடைபெறுகிறது. ராஜபுத்திர ரைபிள்ஸ் படைப்பிரிவு, பிற ராணுவப் பிரிவுகள் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின் கீழ், நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும் இருநாட்டுப் படைகளின் திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
சாலை மறியல் நடவடிக்கைகள், நகர்ப்புற ரோந்து, வாகனத் தொடரணிப் பாதுகாப்பு, பதுங்கியிருந்து தாக்குதல் மற்றும் கூட்டத்தைக் கலைத்தல் உள்ளிட்ட நவீன போர் உத்திகள் இப்பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335826®=3&lang=1
***
TV/NB/SU