இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 7:28PM by PIB Chennai
துறைமுக உள்கட்டமைப்பு, கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்த்தல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் ஆந்திரப் பிரதேசம் உலகளாவிய கடல்சார், சரக்குப் போக்குவரத்து மையமாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 31-வது இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் கூட்டாண்மை உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள 1,053 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை ஆந்திரப் பிரதேசத்தை கிழக்கு நாடுகளுக்கான இந்தியாவின் கடல்சார் நுழைவாயிலாக மாற்றும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உலகின் முன்னணி 5 கப்பல் கட்டுமான நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்க ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் கூடிய திறன்மிகு துறைமுகங்கள் மூலம் இத்துறையின் போட்டித்திறன் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335584®=3&lang=1
TV/PD/SU