அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியா – இத்தாலி இடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 2:18PM by PIB Chennai

அறிவியல் ஆராய்ச்சிகளைப் புதிய தொழில்நுட்பங்களாகவும், வணிகப் பயன்பாட்டுக்குரிய கண்டுபிடிப்புகளாகவும் மாற்ற இந்தியாவும் இத்தாலியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா – இத்தாலி அறிவியல், புத்தாக்கக் கலந்துரையாடலின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். 1978-ம் ஆண்டு முதல் நீடிக்கும் இரு நாடுகளின் அறிவியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறையினர், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும் இந்தக் கலந்துரையாடல் முக்கியத் தளமாக அமைந்துள்ளது என டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

பசுமைத் தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஆராய்ச்சியின் பயன்களை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய நிறுவனங்களுக்கு ஆதரவு, தொழில்நுட்பச் சோதனை, மாதிரித் திட்டங்கள், தொழில்நுட்பப் பரிமாற்றம், வணிகமயமாக்கல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335779&reg=3&lang=1  

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335906) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी