நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0: முதலீடு, பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறையில் மின்னணுக் கழிவுகள் அகற்றம் மூலம் ரூ. 2.01 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 10:42AM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதலீடு, பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை 2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தில் பங்கேற்றது. அரசு அலுவலகங்களில் தூய்மையை நிலைநிறுத்துவதையும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அமைச்சகங்களுக்கு இடையேயான பரிந்துரைகள், பிரதமர் அலுவலகக் குறிப்புகள், நாடாளுமன்ற உறுதிமொழிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2 முதல் 31 வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 3 முக்கியப் பரிந்துரைகள் முழுமையாகத் தீர்த்து வைக்கப்பட்டன.

மேலும், 8 நாடாளுமன்ற உறுதிமொழிகளில் ஒன்றுக்கான அமலாக்க அறிக்கை நாடாளுமன்றச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டதுடன், இரண்டு தூய்மை முகாம்களும் நடத்தப்பட்டன. எம்எஸ்டிசி நிறுவனம் மூலம் மின்னணுக் கழிவுகள் அகற்றப்பட்டதன் மூலம், ரூ.2,01,777 வருவாய் ஈட்டப்பட்டது. உயரதிகாரிகள் அலுவலக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மையைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335680&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335799) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Assamese